- ராக் என்னும் காட்டு கூச்சல். மேல் நாட்டு இசையின் பலவிதமான பரிமாணங்களின் ஒரு மிகப்பெரிய ஆளுமையான இசைதான் ராக் எனப்படும் அதிரும் இசை.ஐம்பதுகளில் ஆரம்பித்த இந்த இசை மழை ஓயாமல் இன்று வரை பெய்து கொண்டிருக்கிறது. பொதுவாக ராக் இசையை அதன் பின்னணி,வடிவம்,அது தோன்றிய விதம் தெரியாதவர்கள் ஒரே வார்த்தையில் காட்டுகூச்சல் என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு பீசாவை கடித்து குதற ஆரம்பித்து விடுவார்கள்.அல்லது பேஸ்டை பிதுக்கி பல் துலக்க சிரத்தை எடுப்பார்கள்.அதாவது அந்த அளவுக்குத்தான் ராக் அவர்களுக்கு பரிச்சயம்.கர்நாடக ஹிந்துஸ்தானி இசையில் மேல் மண்டை வரை ஊறிப்போயிருக்கும் நம் சமூகம் இப்போது காலை ஆட்டிகொண்டிருப்பது அதே காட்டுகூச்சலுக்குத்தான்.கொஞ்சம் கொஞ்சமாக மேல்நாட்டு சங்கீதத்தின் விளிம்பிலிருந்து நாம் வெளியே வர முடியாத அளவுக்கு உள் சென்று கொண்டிருக்கிறோம்.
வார்த்தை விருப்பம்
Thursday, 6 October 2011
Wednesday, 5 October 2011
மாஸ்கோவிலிருந்து சென்னை வரை
சிறு வயதில் நான் படித்த ஒரு ரஷ்ய சிறுகதையின் தலைப்பு வாழ விருப்பம். புத்தக பக்கங்களுக்குள் நான் காணாமல் போன ஒரு மின்சார அனுபவத்தை அந்த கதை எனக்கு கொடுத்தது. ரஷ்ய புதினங்களை பற்றி ஒரு பதிவு எழுத எனக்கு மிக நீண்ட..... நாட்களாக ஆர்வம். தலைப்பு கூட வைத்து விட்டேன்." மாஸ்கோவிலிருந்து சில மழை சாரல்கள் ". மிகையில் ஷோலகவ், இவான் துர்க்கநேவ், போரிஸ் பெட்னி, என்று மனதை ஆக்ரமித்த சிலரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் உபரியாக எனக்கு ஒரு ஆனந்தம் வருகிறது.விரைவில்....
Subscribe to:
Posts (Atom)